நமக்கு எதுக்கு வம்பு /Namku edhuku vambu

120.00 110.00

கார்ட்டூனிஸ்ட் பாலா இணைய உலகில் வெகு பிரபலம். குமுதம் ரிப்போர்ட்டரின் கார்ட்டூனிஸ்ட். ஃபேஸ்புக்கில் மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார். எதிரிகள் என்று கணகெடுத்தால் எப்படியும் இரு மடங்காகவாவது இருக்கும். அதுவும் திமுகக்காரர்களிடம் அவரைப் பற்றி பேசிப் பார்க்க வேண்டுமே. காதில் புகைவிடுவார்கள். அத்தனை லோலாயம் பிடித்த ஆள். அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். தலைப்பு – ‘நமக்கு எதுக்கு வம்பு?’. அவர் புத்தகத்தின் தலைப்பைச் சொன்னவுடன் சிரிப்பு வந்துவிட்டது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு ‘எனக்கு ஒண்ணும் தெரியாதப்பா’ என்று சொல்வது மாதிரிதான்.

பாலாவின் கார்ட்டூன்கள் சர்ச்சைக்குரியவை என்றும் ஒரு தலைபட்சமானவை என்றும் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் இப்படியான ஆளுமைகளுக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. இவர்கள்தான் சலனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சலனங்கள் அவசியமானவை என்று நம்புகிறேன். உரையாடல்களுக்கும் விவாதங்களுக்குமான தொடக்கப்புள்ளியாக இந்தச் சலனங்கள் இருக்கின்றன

X