சுந்தர் பிச்சை: புதிய நம்பிக்கை/Sundar Pitchai

125.00 118.00

உலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை.

2015 ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி, அடக்கமான ஒரு தொழில் நுட்ப வல்லுநர், பெரும் ஐ டி நிறுவனமான கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இவர் ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்தவர். சுந்தர் பிச்சையின் நியமனத்தை எதிர்பார்க்க முடியாதது என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில் கூகிளில் இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கின்றன. அவர் உருவாக்கிய அல்லது வழிநடத்திய எல்லாத் தயாரிப்புகளுமே வெற்றி பெற்றிருக்கின்றன-குரோம்,குரோம் ஓஎஸ்,ஆண்டிராய்டு இப்படிப் பலவற்றை சொல்லலாம்.

மக்களை வழிநடத்துவதிலும், புதுமையாக யோசிப்பதிலும் இவர் தேர்ந்தவர்.

ஆனாலும், கூகிள் தன் தயாரிப்புகளை ஒழுங்குபடுத்தி, அதில் முன்பைவிட குறைவான பொறுப்புகளைக் கொண்ட அதே நேரம் முழுமையான கவனக் குவிப்பை அதிகரித்த கூகிளின் தலைவராக சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டதில் சில கேள்விகள் எழும்புவதை தவிர்க்க முடியாது. வருங்கால கூகிளில் சுந்தர் பிச்சையின் பங்கு என்ன?

ஏற்கனவே உள்ள தயாரிப்புகளில் கூகிள் கவனம் செலுத்துமா அல்லது புதிய தயாரிப்புகளில் கவனம் குவிக்குமா?

பேஜ், ப்ரின் மற்றும் ஷிமிடால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட கூகிளை, சுந்தர் பிச்சை முன்னே கொண்டு செல்வாரா அல்லது அவரது விமர்சகர்கள் சொல்வதுபோல இந்த முக்கியமான பொறுப்புக்கு அவர் இன்னும் தயாராகவில்லையா?

X