இதுவரை

250.00 238.00

சி. மணி (எ) வே. மாலி (எ)
எஸ். பழனிசாமி. (1936 – 2009)

தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் முறையும். மனம் விரும்பி ஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம்,
இலக்கணம், தற்கால இலக்கியம்.படிப்பதற்கு மனம் இயல்பாக நாடியவை அறிவியல், தத்துவம்,உளவியல், துப்பறியும் கதைகள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அறிந்ததற்கு அப்பாலுள்ள பிரக்ஞைத் தளங்களைக் கண்டறிய உதவும் சிந்தனைகள்— –
திருமூலரிலிருந்து,தாவோவிலிருந்து, ஜென், சூஃபி,குர்ட்ஜீஃப், ஜே. கிருஷ்ணமூர்த்தி,
கார்லோஸ் காஸ்டெனடா ஈறாக.ஆனால், எதிலும் நிலைகொள்ள முடியாத, அந்நியன் உணர்வு. இவற்றின் வெளிப்பாடுகள்
ஒருதன்மையன அல்ல. அதனால்தான் செய்நேர்த்தியும், எளிதில் எதிலும் சிக்கிக்கொண்டுவிடாத ஜாக்கிரதையும், எள்ளலும்,
புராதனமும், நவீனமும், கலையும்,விளையாட்டுத்தனமும் இவர் கவிதைகளில் கலந்து காணப்படுகின்றன.

X