அபிதா/Abitha

100.00 90.00

லா.ச.ராமாமிர்தத்தின் உணர்ச்சிச் சித்தரிப்புகளைச் சாப்பாட்டுக்கும் இசைக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை நிரப்பும் முயற்சிகள் எனலாம். சுப்புடு இசையனுபவத்தைச் சாதாரணமாகச் சாப்பாட்டு அனுபவத்துடன் கலந்துவிடக் கூடியவர். சாப்பாடு உலகியல் அனுபவம் என்றால் இசை மீபொருண்மையியல் (Metaphysics) அனுபவம். லெளகீயத்தை மீபொருண்மையுடன் இணைத்து மேலெடுப்பதும், மீபொருண்மையை உலகியலுடன் இணைத்து அன்றாட அனுபவமாக ஆக்குவதும் லா.ச.ராமாமிர்தத்தின் நோக்கங்களாக உள்ளன.
– ஜெயமோகன்

**
வாழ்வு ஒரு கனவானால், அதை அறிய உணர்வற்று, இதுவரை விரலுக்கு இடுக்கில் நனவாய் வழிந்தது போக, மிச்சத்தில் கனவை ருசிக்க… கனவை நிறுத்த… இயலாதா? கனவு, நிலையாமை, நித்யம், அநித்யம் – இதெல்லாம் நாம் இருக்கும் வரை பேசும் பேச்சுத்தானே! எல்லாம் இருக்கும் வரைதானே!
– அபிதாவில் லா.ச.ரா

X